ஒசூர் : ஒசூர் அருகே கோப்பசந்திரம் பகுதியில் 2 கார்கள் மீது கனரக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மராட்டியத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி 25 டன் வெங்காய மூட்டைகளுடன் லாரி சென்றது. கோப்பசந்திரம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 2 கார்கள் மீது கவிழ்ந்தது. கனரக லாரி கவிழ்ந்து அதன் கீழ் சிக்கிய 2 கார்களில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.
+
Advertisement