பெரம்பூர்: பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷா (38, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 20 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மகள் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், மணி (20) என்பவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி மணி தனக்கு பிறந்தநாள் என்று கூறி சிறுமியை மாதவரம் அருகே உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து போதையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய், செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மணியை தேடி வருகின்றனர்.