சென்னை: இதய பரிசோதனை மேற்கொள்வதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் (86) மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸ் நேற்று சேர்க்கப்பட்டார். இதய பரிசோதனை சிகிச்சைக்காக என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ‘என்றும் கிராமங்களை நோக்கி பயணம்’ என்ற பெயரில் ராமதாஸ் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்கான தேதி குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.