Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசு துறைகளில் 1910 இடங்கள் :டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு

தேர்வு: டிஎன்பிஎஸ்சி- ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சர்வீஸ்கள் தேர்வு- 2025 (டிப்ளமோ/ஐடிஐ தரம்). (TNPSC- Combined Technical Services Exam- 2025 (Diploma/ITI Level).

மொத்த காலியிடங்கள்: 1910.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பணிகள் விவரம்

கெமிஸ்ட் கிரேடு-1, மைன்ஸ் சர்வேயர், அசிஸ்டென்ட் மேனேஜர் (மைன்ஸ்), ஜூனியர் இன்ஜினியர், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜூனியர் டிராப்டிங் ஆபீசர், சர்வேயர், அசிஸ்டென்ட் அக்ரிகல்ச்சர் ஆபீசர், அசிஸ்டென்ட் ஹார்டிகல்ச்சர் ஆபீசர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (சிவில்), டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்), ஜூனியர் பர்னர், ஜூனியர் ேபார்மேன் (ஆலை), அசிஸ்டென்ட் ரப்பர் மேக்கர், ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (ஆர்க்கிடெக்சுரல் டிராப்ட்ஸ்மேன்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (பேசிக் டிசைனர் மற்றும் விர்ச்சுவலர் பெரிபயர்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க் மெயின்டெனன்ஸ்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் நியூமெரிக்கல் கன்ட்ரோல் மெஷினிங் டெக்னீசியன்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (டிராப்ட்ஸ்மேன் சிவில்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (இன்ஜினியரிங் டிராயிங்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (எலக்ட்ரீசியன்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (பேஷன் டிசைன் மற்றும் டெக்னாலஜி), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (பிட்டர்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (புட் புரடக்‌சன்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் மெயின்டெனன்ஸ்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (இன் பிளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்டென்ட்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (மெஷினிஸ்ட்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (வொர்க்‌ஷாப் கால்குலேஷன் மற்றும் அறிவியல்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (டூ வீலர் மற்றும் த்ரீ வீலர் மெக்கானிக்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (எலக்ட்ரிக் வெஹிகிள் மெக்கானிக்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (மோட்டார் வெஹிகிள் மெக்கானிக்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (மேனுபேக்சரிங் புராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் டெக்னீசியன்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (ஆபரேட்டர்-அட்வான்ஸ்டு மெஷின் டூல்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (பம்ப் ஆபரேட்டர் மற்றும் மெக்கானிக்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (ஷூவிங் டெக்னாலஜி), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (ஸ்மார்ட்போன் டெக்னீசியன் மற்றும் அப் டெஸ்டர்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (எலக்ட்ரிக்கல் சோலார் டெக்னீசியன்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (டெக்ஸ்டைல் மெக்காடிரானிக்ஸ்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (டர்னர்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (வெல்டர்), ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் (வயர்மேன்), ஹாஸ்டல் சூபரின்டெண்டென்ட் மற்றும் உடற்பயிற்சி அலுவலர், ஓவர்சீர்/ஜூனியர் டிராப்டிங் ஆபீசர், ஜூனியர் டிரேட்ஸ்மேன் (எலக்ட்ரீசியன்), ஜூனியர் டிரேட்ஸ்மேன் (வெல்டர்), ஜூனியர் டிரேட்ஸ்மேன் (பிட்டர்), ஜூனியர் டிேரட்ஸ்மேன் (டீசல் மெக்கானிக்), ஜூனியர் டிரேட்ஸ்மேன் (ஏசி மெக்கானிக்), ஜூனியர் டிரேட்ஸ்மேன் (ஷீட் மெட்டல்), டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்).

வயது: 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.பொதுப் பிரிவைத் தவிர இதர பிரிவினர்களான எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/பிசி/ எம்பிசி/சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. கெமிஸ்ட்- கிரேடு 1 பணிக்கு பொதுப்பிரிவினர்கள் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஜூனியர் டிரெய்னிங் ஆபீசர் பணிக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு சலுகை தொடர்பான கூடுதல் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஎஸ்பிஎஸ்சியால் நடத்தப்படும் தமிழ் மொழித் திறன் மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு கட்டணம்: ரூ.100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. ஒன்டைம் ரிஜிஸ்டிரேஷன் முறையில் தங்களைப் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யாதவர்கள் தனியார் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.07.2025.