மதுரை : உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலக சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் 1979ல் தனித்துறையாக தோட்டக்கலைத்துறை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் உழவர்கள் அலுவலக தொடர்பு 2.0 திட்டத்தின் கீழ் (யுஏடிடி) உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை மீண்டும் வேளாண் துறையின் கீழ் கொண்டு வருவதை கண்டித்து, தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறைகளின் கீழ் தனித்தனியாக அலுவலர்கள் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தோட்டக்கலைத் துறையில் இணைத்து ஒரு ஏஏச்ஓ தலைமையில் அதிகாரிகள் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் நான்கு கிராமங்களில் நெல், கரும்பு, வாழை, காய்கறி, பயிர் பசுமை குடில்களை கண்காணிக்கின்றனர். இதனுடன் வேளாண் பொறியியல் வேளாண் வணிகத்துறை செயல்படுத்தும் திட்டங்களையும் கண்காணித்து வருகின்றனர்.
இதன்படி தோட்டக்கலைத் துறையில் பணியாற்றி வருவோர், தற்போது வேளாண்துறைக்கு மாற்றம் செய்யப்படுவது முறையல்ல. எனவே 2.0 திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


