Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஹாங்காங்கை சூறையாடிய "ரகாசா சூறாவளி": மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை

ஹாங்காங்: சீனாவின் ஹாங்காங்கை சக்தி வாய்ந்த சூறாவளி ஒன்று நெருங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஹாங்காங்கை ரகாசா சூறாவளி சூறையாடி உள்ளது. சீனாவின் ஹாங்காங்கை சக்திவாய்ந்த ரகாசா சூறாவளி நெருங்கி வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்த சூறாவளி படிப்படியாக நகர்ந்து சீனாவின் மேற்கு திசையில் உள்ள ஹாங்காங்கை நோக்கி செல்லும் என உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த ரகாசா சூறாவளி தென் சீனாவின் பொருளாதார மையமான குவாங்டாங் மாகாணத்தை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.

இந்த ரகாசா சூறாவளி அதிகபட்சமாக மணிக்கு 200 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இத்தகைய சூறாவளி கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் போது 230 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கருதி முன்கூட்டியே ஹாங்காங் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதே சமயம் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிற்கு எதிரே மண் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.

அதே போல் முன்கூட்டியே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர். ரகாசா சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பிலிப்பைன்ஸில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் பாதுகாப்பு நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் தீவுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சீனாவின் ஹங்கை ரகாசா சூறாவளி சூறையாடி உள்ளது.

இந்த சூறாவளி கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மொத்த ஹாங்காங் மாகாணத்தையும் புரட்டிபோட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் றது செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சிலைகள் முழுவதும் ஆறுகளாக மாறியுள்ளது. அங்குள்ள வாகனங்கள், பாலங்கள் மற்றும் வீட்டு உடமைகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர். மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங்கின் கிழக்கு, தெற்கு கடற்கரையோரங்களில் பேரலைகள் கரைபுரண்டு வருவதால் அங்குள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.