ஹோண்டா நிறுவனம், ஷைன் 100 டிஎக்ஸ் என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 98.98 சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் இடம்பெற்றுள்ளது., இது அதிகபட்சமாக 7.3 எச்பி பவரையும் 8.04 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஸ்டாண்டர்ட்டு வேரியண்ட்டில் இருந்து சற்று வேறுபட்டதாக இந்த டிஎக்ஸ் வேரியண்ட் இருக்கும்.
இதில் 17 அங்குல டியூப்லெஸ் டயர்கள், மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய ஷாக் அப்சர்வர்கள், புதிய எல்சிடி டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த டிஸ்ப்ளேயில், மைலேஜ், டேங்கில் உள்ள பெட்ரோலில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆப் வசதியும் உள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.74,959 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.