சென்னை: இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தி போட்டிக்கான காங்கேயன் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து 14வது ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டியை நடத்துகின்றன. இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவ.28 முதல் டிச.10 வரை சென்னை, மதுரையில் நடைபெறுகிறது. மேலும் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகைக்கான வங்கி வரைவோலையை முதலமைச்சர் வழங்கினார்.
+
Advertisement
