சென்னை: ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணியின் வீரர்களுக்கு தங்கப்பதக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அணிவித்து, உலகக் கோப்பையை வழங்கினார்.
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணிக்கு பாராட்டுகள். கடுமையாக போராடிய ஸ்பெயின் அணிக்கும் பெரிய கைதட்டலை உரித்தாக்குகிறேன். முழு ஆற்றலை வெளிப்படுத்தி போராடிய இந்தியா, அர்ஜென்டினா அணிகளும் நம் மதிப்பினை வென்றுள்ளன. தமிழ்நாடு மீண்டுமொருமுறை பன்னாட்டளவில் தனது திறனையும், உலகத்தரத்திலான தொடர் நடத்துவதையும், இனிய விருந்தோம்பலையும், விளையாட்டு துறையில் உயர்வினை ஊக்குவிக்கும் சிறந்த சூழலையும் நிரூபித்துவிட்டது.


