இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை உடனே ரத்து செய்க: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
சென்னை: இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். தெற்கு ரயில்வே பதவி உயர்வு தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படுவதாக சு.வெ. கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஒன்றிய அரசின் அலுவலகங்களில் கடுமையாக இந்தியை திணிக்கிறார்கள். ரயில்வே துறையில் ஏற்படும் விபத்துகளுக்கு காரணம் மொழிதான். இந்தி திணிப்பை கைவிட வேண்டும்' எனவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.