மும்பை: ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து அதானி குழுமத்தை செபி விடுவித்தது. அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபடவில்லை என இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ளது. அதானி நிறுவனங்கள் மறைமுகமாக 2020ல் ரூ.620 கோடியை ஆடிகார்ப் எண்டர்பிரைசஸுக்கு தந்ததாக புகார் எழுந்தது.
ஆடிகார்ப் எண்டர்பிரைசஸுக்கு ரூ.620 கோடி தந்ததை நிதி நிலை அறிக்கையில் அதானி கூறவில்லை. மறுபுறம் ஆடிகார்ப் ரூ.610 கோடியை அதானி பவர் நிறுவனத்துக்கு கடனாக தந்ததாக கூறப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் மறைமுக பணப்பரிமாற்றப் புகார் குறித்து செபி விசாரணை நடத்தியது. விசாரணையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று செபி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் விளைவாக, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் லிமிடெட் மற்றும் அதானி பவர் லிமிடெட் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக எந்தவிதமான உத்தரவுகளும் இல்லாமல் இந்த வழக்கை செபி முடித்துக்கொண்டது.