இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி: ரூ.1,500 கோடி நிதி அறிவிப்பு!
இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். இந்தியாவிலேயே கோதுமை உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்கும் பஞ்சாப்பில், எதிர்பாராத வகையில் கொட்டி தீர்த்த அதிகனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன சிலரை தேடுகிற பணியும், பாதிப்பிற்குள்ளான லட்சக்கணக்கான மக்களை மீட்டு, அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3.87 லட்சம் மக்கள், இம்மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, அப்பகுதிகளில் 1.84 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 2,064 கிராமப்பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்ததால், கடந்த சில நாட்களாக சுமார் 20,000 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்நிலையில், மழைநீர் வடிந்த இடங்களில் உள்ள சில பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பிற்குள்ளாகிய பஞ்சாப் மாநிலத்திற்கான நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று பஞ்சாப் வெள்ள சேதங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து நிலைமையை மதிப்பிடுவதற்காக ஹெலிகாப்டரில் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இதையடுத்து கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.