நெடுஞ்சாலைத்துறையிலும் – பொதுப்பணித்துறையிலும் புதியதாக பணியில் சேரும் உதவிப் பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னை: இன்று, (19.8.2025) சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையக் கூட்டரங்கில், நெடுஞ்சாலைத்துறையிலும் – பொதுப்பணித்துறையிலும் புதியதாக பணியில் சேரும் உதவிப் பொறியாளர்களுக்கு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறப்பாகப் பணி செய்யவேண்டும் என்பதற்காக அறிவுரைகள் வழங்கும் கலந்துரையாடலில் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் D.பாஸ்கரபாண்டியன், நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தலைமைப் பொறியாளர் கு.கோ.சத்தியபிரகாஷ், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை / பொதுப்பணித்துறையை சேர்ந்த தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.