மதுரை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரைக்கு இனி அனுமதிக்கக் கூடாது என கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 7 வழக்குகள் விசாரணையில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் "அனுமதி அளிக்கப்பட்ட இடம் மாநில சாலையா? தேசிய நெடுஞ்சாலையா?, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் நலனே முக்கியம், விஜய் பரப்புரை கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா?" எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வழிகாட்டு நெறி முறை வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்காது என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement