Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நெடுஞ்சாலை துறை சார்பில் 5,000 பனை விதை நடும் பணி தீவிரம்

தர்மபுரி : பாலக்கோடு நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தின் சார்பில், மாட்லாம்பட்டி-முருக்கம்பட்டி சாலையில் நீர்வளம் மற்றும் மண்வளம் பாதுகாக்கும் வகையில், பனை விதைகள் நடும்பணி தர்மபுரி கோட்டபொறியாளர் நாகராஜூ அறிவுரையின் பேரில் நடந்தது. பனை விதைகள் நடும் பணியை உதவி கோட்ட பொறியாளர் அருட்செல்வன் தொடங்கி வைத்தார்.

மொரப்பூர் - மாரண்டஅள்ளி ரோடு, பாலக்கோடு - காவேரிப்பட்டணம் ரோடு, பாலக்கோடு - பெரியாம்பட்டி சாலைகளிலும், ஏரிக்கரைகளிலும் 5 ஆயிரம் பனைவிதைகள் நடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஞ்சித், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு, பனை விதைகளை நட்டனர்.