சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிப்ட் (NIFT- பெங்களூரு) மற்றும் RIE மைசூரில் உயர் கல்வி பயிலும் 29 மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி, மடிக்கணினிகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற 2025ஆம் ஆண்டை சேர்ந்த 29 மாணவர்கள் தற்போது முன்னணி கல்வி நிறுவனங்களான நிப்ட் (NIFT- பெங்களூரு) மற்றும் RIE மைசூரில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிப்ட் கல்லூரிக்கு நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தங்கள் கனவுகளை துணிச்சலாகவும் சிந்தனையை படைப்பாற்றலாகவும் வளர்க்குமாறு ஊக்கமளித்தார். மேலும், மாணவர்களின் கல்விப் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்வில் NIFT(Bangalore) இயக்குநர் யாதிந்திரா, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் ஆகியோர் உடனிருந்தனர்.
