உயர்கல்வித் துறை சார்பில் 5 மாவட்டங்களில் கல்விசார் கட்டடங்கள் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 59 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாகத் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2024-ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் இலக்கிய மாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


