திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு வரும் 20ம் தேதி பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த மாநாடு வணிக மற்றும் அரசியல் ரீதியில் நடத்தப்படுவதாகவும், இதனால் சாதாரண பக்தர்களுக்கு எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. மாநாட்டை முன்னிட்டு பம்பையில் நிரந்தர கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது, வரவு, செலவு கணக்குகளை முறையாக வைத்திருக்க வேண்டும், 45 நாட்களுக்குள் இந்த கணக்கு விவரங்களை சிறப்பு ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும், பம்பையின் புனிதத்தன்மையை பாதுகாக்க வேண்டும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
* தங்க தகடுகளை திரும்ப கொண்டு வர வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சபரிமலை கோயிலில் முன்புறம் உள்ள துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு சமீபத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தது. இதற்கு கேரள உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், தங்க தகடுகளை உடனே சபரிமலைக்கு திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இது குறித்து திருவிதாங்கூர் தேசவம் தலைவர் பிரசாந்த் கூறியதாவது: தங்க தகடுகளுக்கான எலெக்ட்ரோ பிளேட்டிங் பணிகள் சென்னையில் தொடங்கிவிட்டது. உடனடியாக அதை நிறுத்த முடியாது. எனவே தங்க தகடுகளை கேரளாவுக்கு திரும்ப கொண்டுவருவது இயலாத காரியம் . இவ்வாறு அவர் கூறினார்.