சென்னை: கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள கூலி திரைப்படம் வரும் 14-ம் தேதி உலங்கெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் டிக்கெட் முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இணையதளங்கள், கேபிள் நெட்ஒர்க்களிலோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கும், 5 கேபிள் டீவி நெட்ஒர்க் நிறுவனங்களுக்கும் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.