சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 8ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.75,760க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு கடந்த வாரம் முதல் தங்கம் விலை குறைந்த வண்ணம் இருந்தது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 வரை குறைந்தது. வார தொடக்க நாளான 18ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.9,275க்கும், ஒரு பவுன் ரூ.74,200க்கும் விற்றது.
நேற்று முன்தினம் தங்கத்தின் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.9,235க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.73,880க்கு விற்றது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,180க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,440க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,230-க்கும் சவரன் ரூ.73,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.126க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது நகை பிரியர்களை கலக்கமடைய செய்துள்ளது.