சென்னை: 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் வழக்கு நேரடி தேர்வு நடத்தி 2500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நியமனம் செய்யப்படவில்லை. தங்களுக்கு 2 % ஒதுக்கீடு தராமல் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கூடாது என உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டது.
தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு தயாராக உள்ளது.அரசு பணி நியமனம் செய்தது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தமிழகத்தில் கலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேரடி தேர்வு நடத்தி 2500 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தது.
இதுக்கு இடையில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத இருப்போர் தரப்பில் சென்னை உயிர்நிதிமன்றத்தில் தங்களுக்கு சேரவேண்டிய 2% ஒதுக்கீடு இடம் ஒதிக்கீடு வழங்கமால் மற்றவர்களுக்கு பணி நிர்வாணம் வழங்கக்கூடாது என்று அந்த வழக்கை தொடர்ந்தார்கள்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 2 % இட ஒதிக்கீட்டை செய்யாமல் நேரடி தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கபட்ட 2500 பேரை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யகூடாது என்று ஏற்கனவே இடைகால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடைகால தடையை எதிர்த்து தற்போது நேரடி தேர்வு மூலமாக பணிநிரந்தரம் செய்யும் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது .
2500 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணிநிரந்தரம்காக காத்திருந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவால் இது மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இடைகால உத்தரவை தடை செய்துவிட்டு இந்த 2500 பேரும் ஆணைகளை வழங்க உத்தரவு பிறப்பிக்க பட வேண்டும் என்று நிலையில் ஒரு வாதம் எடுத்துவைக்கப்பட்டது. தமிழக அரசை பொறுத்தவரைக்கும் தேர்வு மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணிநிரந்தரம் உத்தரவு தயாராக உள்ளதை தெரிவிக்கப்பட்டது .
இதை பதிவுசெய்த நீதிபதிகள் நேரடி தேர்வு செய்யப்பட்ட 2500 பேருக்கு அரசு பணி நிரந்தரம் உத்தரவை உடனே வழங்கலாம் என உத்தரவு அளித்தார்கள். இந்த பணி நிரந்தரம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் இந்த வழக்கில் அடுத்த விசாரணைக்காக மீண்டும் இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு இந்த வழக்கு தள்ளிவைக்கபட்டது.