சென்னை: அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மிலாடி நபி, தொடர் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்கிறார்கள். இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், அதனை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.