நட்பு என்ற உறவு, உணர்வு அடிப்படையிலானது; அதை ஆவணங்கள் தீர்மானிக்க முடியாது: கிட்னி தானம் பெறும் வழக்கில் ஐகோர்ட் கருத்து!!
சென்னை: கிட்னி தானம் பெறும் பெரியசாமியும், வழங்கும் கணேசனும் அங்கீகார குழு முன் குடும்பத்தினருடன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த பெரியசாமிக்கு, ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கிட்னியை தானமாக தர முன்வந்தார். கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரி, அங்கீகாரக் குழுவிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதையடுத்து
அறிக்கை அடிப்படையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அங்கீகார குழு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கிட்னியை தானமாக பெற உள்ள பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கணேசனும், பெரியசாமியும் குடும்ப நண்பர்கள் என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என ஈரோடு ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, குடும்ப நட்பை எப்படி ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நட்பு என்ற உறவு, உணர்வு அடிப்படையிலானது; அதை ஆவணங்கள் தீர்மானிக்க முடியாது என கூறினார். மேலும், விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 4 வாரத்தில் சட்டப்படி இறுதி முடிவு எடுக்க குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.