சென்னை: பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி, திருநெல்வேலியில் பெரிய மழை பெய்துள்ளது என பிரதீப் ஜான், தனியார் வானிலை ஆர்வலர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாயுள்ளது. இதுதொடர்பாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது; தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும். பின்னர் படிப்படியாகக் குறையும்.
கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பிற உள் பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை வரை மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.