மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. மும்பை. தானே, புனே, ராய்கட், நாந்தேட், கோலப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு. குண்டலிகா, சாவித்ரி, பஞ்சகங்கா, வார்ணா, கோய்னா ஆறுகள் அபாய அளவை தாண்டி பாய்கின்றன. ஏரிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
+
Advertisement