கனமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை: கனமழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

