சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர், சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று ஒருநள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காலையில் மழை சற்று ஒய்ந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது.

