ஓசூர்: ஓசூர் அருகே சிப்கர்ட் பகுதியில் தேசியநெடும்சாலை கடுமையான போக்குவரத்து நெருசல் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி பெங்களூர் செல்லும் தேசிய நெடும்சாலையில் குறிப்பாக ஓசூர் அருகே முதல் சிப்கார்ட் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்றுவருகிறது.
அந்த பனியின் காரணமாக நாள்தோறும் போக்குவரத்து நெருசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று காலைமுதல் தற்போது வரை பெங்களுர் செல்லக்கூடிய அணைத்து வாகனங்களும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 2 கிலோ மிட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் மணிக்கணக்கில் வாகனங்கள் ஊர்ந்துசெல்கின்றன. இதன் காரணமாக காவல்துறையினர் நின்று வாகனங்களை சீர்செய்து ஒழுங்குபடுத்தி வந்தாலும் கூட வனகனகள் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெருசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த வாகனஓட்டிகள் கோரிக்கையாகவுள்ளது.