திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வலங்கைமான் சுற்றுவட்டார பகுதிகளிள் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது குறிப்பாக இரவு பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெல்மணிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
குறிப்பாக இரவு பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலவர்நத்தம், பாப்பாக்குடி, நரிக்குடி, கழுகுடி, கருப்படிப்பழம், சரநதம்சன்னதி, மனநல்லுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிள் விவசாயிகள் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட தண்ணிரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டு ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
ஒருசில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் முழுவதும் வயல்களில் தணிந்து மழைநீரில் மிதந்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு இயற்கை சுழல் காரணமாக நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் சேர்ந்து மூழ்கி சேதம் அடைந்து வருகிறது.
இந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுவருவதாக தெரிவித்துள்ளனர் பாதிக்க பட்ட நெல்லை ஈரப்பதம் இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்கள். பாதிக்கபட்ட நெற்பயிர்கள் மற்றும் நெல்மணிகளை உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் வந்து கணக்கிட வேண்டும்.
அதேபோல கணக்கிட்டு தமிழக முதல்வருக்கு எடுத்து கூறி அவர்களிடம் இருந்து ஒரு முறையான நிவாரணம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவைத்து வருகின்றனர்.