திண்டுக்கல்லில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை சாலைகள் மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்த மழைநீர்
திண்டுக்கல்: அகினிநட்சத்திரம் முடிந்து பலமாதங்கள் ஆகியும் திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
மேலும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக பல இன்னலுக்கு ஆளாக்கக்கூடிய சூழ்நிலை வந்ததுள்ளது. இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்திருந்த நிலையில் வழக்கம் போல் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் திடீர் என்று கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலையில் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக தற்போது குளிர்ச்சியான சுழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பேகம்பூர், பூச்சிநாயகப்பெட்டி, தோமையபுரம், நாகல்நகர், சிலம்படி, சிற்றிநாயகப்பெட்டி, உட்பட்ட பல பகுதிகளிலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல கனமழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.