திண்டுக்கல்: கோடை காலம் முடிவடைந்தது கிட்டதட்ட 45 நாட்களுக்கு மேலாகியும் திண்டுக்கல் நகர் மற்றும்சுற்றுவட்டார பகுதிகளிலும் வெயில் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. சராசரியாக 1 நாளுக்கு 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆகிவருகின்றனர். மேலும் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலைமையம் அறிவித்து இருந்தது.
ஆனால் வழக்கத்திற்குமாறாக எப்போதும் போல் இன்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று மதியம் திடீரென்று வானம் கரும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி மின்னல் உடன் சுமார் 45 நிமிடம் கனமழை பெய்தது இதனால் தற்போது. திண்டுக்கல் நகர் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வெயிலில் தவித்து வந்த திண்டுக்கல் மக்களுக்கு இந்த மழை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.