சென்னை: கனமழை எச்சரிக்கையால் கூவம் ஆற்றில் ஆவடி, புதுசத்திரத்தில் உள்ள தடுப்பணையில் இருந்து 250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் மழைபெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக தடுப்பணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் கூவம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. நீர் திறக்கப்பட்டதால் ஆவடி, காடுவெட்டி, திருவேற்காடு, வானகரம், மதுரவாயல் கூவம் ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
+
Advertisement