திருப்பூர்: சென்னை வானிலை மையம் தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் இன்று காலைமுதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த மழையானது சிறிது நேரத்திலேயே பெறும் மழையாக மாரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழையாக கொட்டி தீர்த்தது. இது குறிப்பாக திருப்பூர் மாநகரில் பெரியகாலனி, கரட்டாங்காடு, காமராஜர் சாலை ,
பல்லடம் சாலை, அவிநாசி சாலை , தாராபுரம் சாலை , ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் காற்றுடன் பெய்த கனமழையால் வாகனங்களை நகர்த்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.
மழை காரணமாக பொருட்கள் வாங்குவதிலும் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கனமழை காரணமாக வெப்பம தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.