Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இதயத்துடிப்பு மானி

இதயத்துடிப்பு மானி (Stethoscope) என்பது மருத்துவத்துறையில் இதயத்துடிப்பைக் கண்டறிய உதவும் ஒரு மருத்துவ உபகரணம் ஆகும். மருத்துவர்கள் மனிதன் அல்லது விலங்கின் உடலின் உட்பகுதியில் ஏற்படும் சப்தங்களைக் கேட்க உபயோகிக்கப்படுத்துகின்றனர். இது பெரும்பாலும் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை ஏற்படுத்தும் சப்தங்களைக் கேட்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் தமனி மற்றும் சிரையில் உள்ள ரத்த ஓட்டத்தின் சப்தத்தைக் கேட்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய இதயத்துடிப்பு மானிகள் உள்ளீடற்ற கலன்களின் (vacuum chambers) கசிவை அறியவும் உதவுகின்றன.

உடலில் இதயம் இருக்கும் மார்புப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் வைத்து பொதுவாக மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது.இதயத்துடிப்பு மானி கருவியை முதலில் கண்டுபிடித்தவர் ரெனே லென்னக் என்கிற பிரெஞ்சு மருத்துவராவார். 1781-ல் பிறந்த இவரின் முழுப் பெயர் ரினேப் தியோஃபில் ஹையஸிந்த் லென்னே (Rene Theophilie Hyacinthe Laennec) ஆகும். ஆனால் தற்போது பரவலாக உபயோகிக்கப்படும் இதயத்துடிப்பு மானி ‘பைனாரல் ஸ்டெத்’ (Binural Steth) ஆகும். பைனாரல் இதயத்துடிப்பு மானி, 1855-ல் டாக்டர் கம்மன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

இதில் இரண்டு முனைகள் மருத்துவரின் செவிப் பயன்பாட்டுக்கான பகுதிகளாகவும், ஒரு பகுதி நோயாளியின் மார்பின் மீது தொட்டுச் சோதிக்கும் பகுதி, முதுகுப் பகுதியில் சோதிக்கப் பயன்படுத்தும் பகுதியாகவும் உள்ளது. ஆங்கில Y எழுத்து போன்ற வடிவில் குழாய் போன்றவை உள்ளன. மார்புப் பகுதியைச் சோதிக்கும் முனை நோயாளியின் உடல் மீது வைக்கப்படுகிறது. செவியில் பயன்படுத்தும் இரு முனைகள் மருத்துவரின் இரு காதுகளிலும் வைக்கப்படுகின்றன.

குழல் வழியாக நோயாளியின் இதயச் சத்தங்களும், நுரையீரல் சத்தங்களும் மருத்துவருக்குக் கேட்கும். இதயத்துடிப்பு மானியானது பொதுவாக ரப்பர் அல்லது நெகிழியால் செய்யப்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் அல்லது சோப்பினைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதயத்துடிப்பு மானி அணிவது மருத்துவர்களுக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது.இதயத்துடிப்பு மானியில் அக்கோஸ்டிக் (Acoustic),எலெக்ட்ரானிக் (Electronic), பதிவு செய்யும் இதயத்துடிப்பு மானி (Recording stethoscopes), கருவைப் பரிசோதிக்கும் இதயத்துடிப்பு மானி (Fetal stethoscope), டாப்ளர் இதயத்துடிப்பு மானி (Doppler stethoscope) போன்ற வகைகள் உள்ளன.