வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப்பிற்கு தற்போது 79 வயது ஆகிறது. அவரது உடல் நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகிறது. திடீரென அவர் மறைந்தால் அவருக்கு பதில் துணை அதிபராக உள்ள ஜே.டி.வான்ஸ், புதிய அதிபராக பதவி ஏற்பார். இதுபற்றி அமெரிக்கா டுடே நாளிதழுக்கு ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டி: அதிபர் டிரம்ப் நம்பமுடியாத அளவிற்கு நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.
அவர் தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இருப்பினும் பயங்கரமான சோகம்(டிரம்ப் திடீர் மறைவு) ஏதேனும் ஏற்பட்டால், நாட்டின் மிக உயர்ந்த பதவியை(அதிபர்) ஏற்க எனது தற்போதைய பணி என்னைத் தயார்படுத்தியுள்ளது. கடவுள் ஒரு பயங்கரமான சோகம் வராமல் தடுக்கட்டும். 2028 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்பது டிரம்ப் கருத்து. இவ்வாறு வான்ஸ் கூறினார்.