Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடல்நிலை பாதிப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் ஜான்வி கபூர் அனுமதி

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ேஜாடியாக ‘தேவரா’ என்ற 2 பாகங்கள் கொண்ட படத்தில் நடிப்பதன் மூலம் தென்னிந்திய படவுலகில் அறிமுகமாகிறார். இதையடுத்து தெலுங்கில் ராம் சரண் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாள்தோறும் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருவது அவரது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள ஜான்வி கபூர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தியில் ஜான்வி கபூர் நடித்துள்ள படம், ‘உலஜ்’. வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான புரமோஷனில் பங்கேற்ற ஜான்வி கபூருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஃபுட் பாய்சன் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை.

இதனால் அவர் புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் புதுப்படத்தின் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்தார். எனினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், நேற்று அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. தற்போது ஜான்வி கபூர் தெற்கு மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதை அவரது தந்தை போனி கபூர் உறுதி செய்துள்ளார்.