திருவண்ணாமலை: மீசநல்லூரில் குடிநீர் என நினைத்து தின்னர் குடித்த 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தில் வர்ணம் பூச வைத்திருந்த தின்னர் பாட்டிலை 3 குழந்தைகள் தவறுதலாக குடித்துள்ளனர். உடல் நலம் பாதித்த 3 குழந்தைகள் முதலில் வந்தவாசியிலும் பின்னர் செங்கல்பட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement