சென்னை: பொன்னேரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பஜார், ஆரம்பாக்கம், எளாவூர், ஏனாதிமேல்பாக்கம், மாதர்பாக்கம், சுண்ணாம்புகுளம், ரெட்டம்பேடு, பூவலம்பேடு பூதூர், கண்ணன்பாக்கம், பஞ்செட்டி, ஆண்டர் குப்பம், மல்லிங்குப்பம், ஆரணி, பெரியபாளையம், மூக்கரம்பாக்கம் தேவம்பட்டு, கொள்ளூர், சின்னம்பேடு, பொன்னேரி, பெரியமாங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளை சேர்ந்த கிராமப்புற மக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனை மற்றும் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை, மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனைக்கு மேற்கண்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், மூதாட்டி, சிறுவர்கள் முதல் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை அரசு மருத்துவமனையில் பொன்னேரி தாலுகா மல்லிகுப்பம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி(22) என்ற இளம் பெண்ணுக்கு ஊனமுற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இது சம்பந்தமாக மேற்கண்ட புவனேஸ்வரி திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் நான் மேற்கண்ட கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள சுமதி கிளினிக் மருத்துவம் பார்த்ததும் அருகே உள்ள மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கிக்கொண்டு வந்துள்ளேன். எனக்கு மூன்று மாத காலத்திலிருந்து முறையாக ஸ்கேன் எடுத்து பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தபோது அந்த ஸ்கேன் ரிப்போட்டில் குழந்தை ஏற்கனவே ஊனமுற்று இருந்துள்ளதை மருத்துவர் என்னிடம் தெரிவிக்காமல் இருந்துவிட்டார்.
அந்தச் சமயம் கூறியிருந்தால் கருவை வைத்திருப்பேன் எனவும் டாக்டரின் கவனக்குறைவால் காலம் காலமாக ஊனமுற்றோர் என் குழந்தையை வளர்க்க வேண்டிய மன வேதனையுடன் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அம்பிகா மற்றும் மருத்துவர்கள் மேற்கண்ட கிளினிக்கில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மருத்துவர்கள் இல்லாததால் அருகே இருந்த மெடிக்கல் ஷாப்பை ஆய்வு மேற்கொண்ட போது முறையாக படிக்காத தனியார் நபர் இருந்ததால் மெடிக்கல் ஷாப்பை சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


