ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: "ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது. பாஜகவின் தேர்தல் வெற்றிகளின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் 'ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதை வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார். வாக்குத்திருட்டு குறித்து ஆதாரங்கள் வெளியிட்டபின்பும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
