சண்டிகர்: அரியானா மாநில காவல்துறையில் ஏடிஜிபியாக புரன் குமார்(52) பதவி வகித்து வந்தார். 2001ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த புரன் குமார், கடந்த செப்டம்பர் மாதம் ரோஹ்தக்கின் சுனாரியாவில் உள்ள காவல் பயிற்சி மையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார். ஐஏஎஸ் அதிகாரியான அம்னீத் பி குமார், கமிஷனர் மற்றும் அரியானா மாநில வௌியுறவு ஒத்துழைப்புத்துறை செயலாளராக உள்ளார். அம்னீத் பி குமார் அரியானா முதல்வர் நயாப் சைனி தலைமையிலான குழுவினருடன் ஜப்பான் சென்றுள்ளார்.
இந்நிலையில் புரன் குமார நேற்று சண்டிகரில் உள்ள செக்டர் 11 இல்லத்தின் தன்னைத்தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து புரன் குமார் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.