அரியானாவின் குருகிராமில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
சண்டிகர்: அரியானாவின் குருகிராமில் சில மணிநேரம் பெய்த மழைக்கே மக்கள் இயல்பு வாழ்கை முடங்கியது. அரியானாவின் குருகிராமில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அரியானா மாநிலத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், நேற்று குருகிராம் மாவட்ட முழுவதும் பரவலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைத்தனர். தாழ்வான இடங்களில் உள்ள விதிகள், சாலைகள் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனகளை தள்ளியவாறு சென்றனர். மேலும் கார் பேருந்துகள் பழுதாகி நின்றதால் மக்கள் தள்ளியவாறு சென்றனர். கனமழை காரணமாக மேம்பாலங்களிலும் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதில் மேம்பாலம் ஒன்றில் மழைநீர் அருவிபோல ஆர்பரித்துக்கொட்டியது. இதனால் பலத்தில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் கண்ணாடிகள் உடைந்தன.