ஹரியானா: ஹரியானாவில் 360 கிலோவெடி பொருட்களுடன் மருத்துவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிபொருள் இருப்பதாக கிடைக்கப்பட்ட தகவல் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா மணிலா காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது டெல்லி அருகே உள்ள பரீதாபாத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் மாணவர்களின் லாக்கரில் 360 கிலோ வெடி பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அமோனியம் நைட்ரேட் வெடிபொருட்கள் கல்லூரிக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது தொடர்பான விசாரணையை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். வெடி பொருட்களுடன் ஒரு ஏ.கே 47ரக துப்பாக்கியும் 3 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் டாக்டர். உமர் முகமது என்பவரை தற்போது தேடி வருவதாகவும் ஜம்மூ காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சூட்கேசில் உள்ள வெடி பொருட்களை ஆய்வகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, என்னென்ன இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பேட்டரிகளுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்கள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு செய்ய முயற்சியா என விசாரணை நடைபெற்று வருகிறது.

