பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியின் லாங்வுட் வளாகத்தில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்வர்டு பல்கலைகழகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பல்கலைக்கழகத்தின் லாங்வுட் வளாகத்தில் உள்ள கோல்டன்சன் கட்டிடத்தின் நான்காவது மாடியில் அதிகாலை 3 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதைக் கண்டதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
