சிட்னி: ஆஸ்திரேலியாவில் வெஸ்டர்ன் சபர்ப்ஸ் கிளப் அணிக்காக, இந்திய வம்சாவளி வீரர் ஹர்ஜாஸ் சிங் ஆடி வருகிறார். பிராட்டன் பார்க்கில், சிட்னி கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங், 74 பந்துகளில் சதத்தை எட்டினார். அதைத் தொடர்ந்து சிக்சர் மழை பொழிந்த அவர், அடுத்த 67 பந்துகளில் 214 ரன்கள் குவித்தார்.
மொத்தத்தில், 141 பந்துகளில் ஹர்ஜாஸ் சிங் 314 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில், 35 சிக்சர்களை விளாசி, 120 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். இதற்கு முன், 1903ல், ரெட்ஃபர்ன் அணிக்கு எதிரான போட்டியில் பேடிங்டன் அணிக்காக ஆடிய விக்டர் டிரம்பர் 22 சிக்சர்கள் விளாசியதே என்எஸ்டபிள்யு பிரிமியர் போட்டிகளில் சாதனையாக இருந்தது.