ஐதராபாத்: இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ‘வாரணாசி’ என்ற பான் வேர்ல்ட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா முதன்மை வேடத்திலும், பிருத்விராஜ் சுகுமாரன் வில்லனாகவும் நடிக்கின்றனர். இதன் டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த மிக பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மிகப்பெரிய திரையில் ‘வாரணாசி’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒளிபரப்பியபோது சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. அதன்பிறகு பேசிய இயக்குனர் ராஜமவுலி, ‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அப்பா எப்போதும் நான் அனுமனால் ஆசிர்வதிக்கப்பட்டு வருவதாக கூறுவார். என் மனைவியும் அனுமன் பக்தை. அனுமனை தனது நண்பன் போல நினைத்து அவருடன் பேசி கொண்டிருப்பார் என் மனைவி.
இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது எனக்கு அவர்கள் மீது கடுமையாக கோபம் வந்தது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவாரா? என் மனைவியின் நண்பன் அனுமன் இந்த முறையாவது எனக்கு இதை சரிசெய்வாரா” என பேசினார். இந்நிலையில், ராஜமவுலி, இந்து கடவுளான அனுமனை அவமதித்து விட்டதாக ஐதராபாத்திலுள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்து அமைப்பினர் அவர்மீது புகார் அளித்துள்ளனர்.


