Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.04/2025, நாள் 16.10.2025 இன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் வரும் 27ம் தேதி (காலை மற்றும் மாலை) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 11.12.2025 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் இடர்ப்பாடு மற்றும் அதன் தொடர்பான ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறை தீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு மையங்கள் மாற்றம் சார்ந்த கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.