Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஹெச்-1பி விசா கட்டணம் ஒருமுறை மட்டும் செலுத்த வேண்டும், வருடாந்திர கட்டணம் அல்ல: வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஹெச்-1பி விசா கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ஹெச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ஹெச்-1பி விசா தரப்படுகிறது. ஹெச்-1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்துவருகின்றனர். ஹெச்-1பி விசாக்களை பயன்படுத்தும் நாடுகளில் 71 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இன்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் ஹெச்-1பி விசாக்களை அதிகளவில் பெற்றுள்ளன. ஹெச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என வெள்ளை மாளிக்கை விளக்கமளித்துள்ளது. வெள்ளை மாளிகையின் விளக்கத்தால் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் நிம்மதியடைந்துள்ளனர்.

ஹெச்-1பி விசா கட்டணம் ஒருமுறை மட்டும் செலுத்த வேண்டும், வருடாந்திர கட்டணம் அல்ல. வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் அவசரமாக திரும்ப வேண்டாம் என்று வெள்ளைமாளிகை அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு உத்தரவு பொருந்தாது என்றும் வெள்ளை மாளிக்கை தெரிவித்துள்ளது.