கெய்ரோ: துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 25 மீட்டர் சென்டர் ஃபையர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர் குர்ப்ரீத் சிங், நூலிழையில் தங்கம் பெறும் வாய்ப்பை தவற விட்டார். இப்போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். உக்ரைன் வீரர் பாவ்லோ கோரோஸ்டைலோ தங்கம் வென்றார். இதற்கு முன், 2018ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதே பிரிவில் குர்ப்ரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியை அடுத்து, இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 13 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 3ம் இடம் பிடித்தது. சீனா 12 தங்கம் பெற்று முதலிடத்தையும், தென் கொரியா 7 தங்கம் வென்று 2ம் இடமும் பிடித்தன.
+
Advertisement


