கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் திட்டங்களை தொடர ஐகோர்ட் வழங்கிய உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி : சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் திட்டங்களை தொடர ஐகோர்ட் வழங்கிய உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் கோல்ப் மைதானத்தில் பசுமை பூங்கா, நீர் நிலைகள் அமைக்கும் பணியை தொடரலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
