அகமதாபாத்: குஜராத் மாநிலம் வதோதரா அருகே பத்ரா பகுதியில் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டது. மஹிசாகர் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் திடீரென உடைந்ததால் டேங்கர் லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியது.
பத்ரா மற்றும் ஜம்புசார் இடையேயான மஹிசாகர் ஆற்றில் உள்ள காம்பிரா பாலம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தின் மீது சென்ற லாரிகள் மற்றும் டேங்கர்கள் ஆற்றில் விழுந்தன, இதனால் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.
View this post on Instagram
ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் திடீரென உடைந்ததால் டேங்கர் லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கிய காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பத்ரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாலம் இடிந்து விழுந்து வாகனங்கள் விபத்திற்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனந்த் மாவட்டத்தை வதோதரா மாவட்டத்துடன் இணைக்கும் முக்கியமான பாலம் நடுவில் இடிந்து விழுந்ததால் குழப்பம் ஏற்பட்டது.


